முகப்பு / Blog / திருமணம் செய்ய இந்த பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் | Important Porutham for Marriage in Tamil
Blog

திருமணம் செய்ய இந்த பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் | Important Porutham for Marriage in Tamil

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
25 Apr 2025, 13:58
14 பார்வைகள்
பகிர் :
திருமணம் செய்ய இந்த பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் | Important Porutham for Marriage in Tamil

“ நோயின்றி நீண்ட காலம் வாழ பணம் தேவையில்லை நல்ல துணை இருந்தால் போதும் “ என்ற உலக நியதிணை மனதில் கொண்டு திருமணத்திற்கு தேவையான பொருத்தங்களை பார்க்கலாம்

கீழ்க்கண்ட ஜாதக பொருத்தங்களை  இருக்கின்றனவா என்று நன்கு பார்த்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இப்படி அமையும் திருமண வாழ்வில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதே நம் நம்பிக்கை . 

  • .கணப்பொருத்தம்
  •  ரஜ்ஜிப்பொருத்தம்
  •  ராசி பொருத்தம்
  •  யோனி பொருத்தம்
  • வேதைப்பொருத்தம்
  • வசிய பொருத்தம்
  • மகேந்திரப்பொருத்தம்
  • ஸ்திரி பொருத்தம்
  • ராசி அதிபதி பொருத்தம்
  • நாடி பொருத்தம்
  • .வர்ண பொருத்தம்
  • திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது,
  • தினம் பொருத்தம்,
  • கணம் பொருத்தம்,
  • யோனி பொருத்தம்,
  • ராசி பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம்
  • ரஜ்ஜூ பொருத்தம்

பழைய நாட்களில் திருமண பொருத்தம் என்பது 20 பொருத்தங்களை பார்ப்பதாக இருந்தது.

அதற்குப் பின், அது 11 ஆக குறுகியது.

தற்பொழுது நாம் 10 பொருத்தங்கள் பார்க்கிறோம் 

திருமண பொருத்தம் இருக்கிறது என்றால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?important Porutham for Marriage in Tamil

மணப்பெண் மற்றும் மணமகன் இருவரது ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஜோதிடரை அணுகிஇந்த பத்து பொருத்தங்களை தாண்டி இவையெல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்

  • செவ்வாய் தோஷம்
  • சர்ப்ப தோஷம்
  • புனர்பூ தோஷம்
  • மாங்கல்ய தோஷம்
  • ஷஷ்டாஷ்டக தோஷம்
  • துவி துவாதச தோஷம்
  • திருமணத்தில் பத்து பொருத்தம் என்பது
  •  மன புரிதல், 
  • ஒற்றுமை,
  •  மகிழ்ச்சி, 
  • தாம்பத்திய உறவு, 
  • குழந்தை பாக்கியம்
  • சுபிட்சமான எதிர்காலம் 

என்பன அமையுமா ? என்பதற்காக பார்க்கப்படுகிறது. 

இதற்கு இருவருடைய ஜாதகங்களிலும் உள்ள பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றை கிரக தோஷங்களோ பார்த்து கணிக்கப்படும்

தினப் பொருத்தம் என்பது நட்சத்திர பொருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண், பெண் இருவரின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள பார்க்கப்படும் பொருத்தமாகும். பெண் நட்சத்திரத்தில் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 இதில் ஏதேனும் ஒரு தொகை வந்தால் தினப் பொருத்தம் உண்டு.

ஒருவரின் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கணப் பொருத்தம் பார்க்க வேண்டும். இதில் தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று கணங்கள் இருக்கின்றன. தேவ அல்லது மனித கணம் இருப்பின் திருமணம் செய்யலாம். இரண்டு நட்சத்திரங்களும் ராட்சஷ கணமாக இருந்தால் பொருத்தம் இல்லை.

மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்திற்காக பார்க்கப்படுகிறது. பெண் நட்சத்திரத்தில் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் 4,7,10,13,16,22,25 இதில் ஏதேனும் ஒரு தொகை வர வேண்டும்.

திருமணம் செய்யும் இருவரும் செல்வ செழிப்பாக வாழ்வார்களா என்பதை அறிவதே ஸ்திரி தீர்க்கப் பொருத்தம். பெண் நட்சத்திரம் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது தொகை 13க்கு மேலே என்றால் சுபம்.

பத்து பொருத்தங்களில் மிக முக்கிய பொருத்தமாக யோனிப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கணவன்-மனைவி இடையிலான பாலியல் ஈர்ப்பு தொடர்பான விஷயங்களைக் யோனிப் பொருத்தம் கணிக்கிறது.

வாழையடி வாழையாக வம்சம் தழைக்குமா என்பதை அறிய ராசிப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. பெண் ராசி இருந்து தொடங்கி ஆண் ராசி வரை எண்ணுகையில் 2,4,6,8,12 என தொகை வந்தால் ராசி பொருத்தம் இல்லை.

திருமண பொருத்தம் பார்க்கும்போது மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ராசிக்கு அதிபதியாக இருக்கும் கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தால் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

இருவருக்கும் ஒருவருக்கொருவர் அன்யோன்யம் இருக்குமா ? இல்லையா என பார்ப்பதற்கு வசியப் பொருத்தம். இப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ராசி வசிய பொருத்தமாக இருக்கும்.

பெண் வீட்டார் முக்கியமாக பார்க்கும் பொருத்தமாக ரஜ்ஜு பொருத்தம் உள்ளது. ஒன்பது பொருத்தங்களும் இருந்து ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ரஜ்ஜு பொருத்தம் பெண்களின் மாங்கல்ய பாக்கியத்தை குறிக்கிறது.

தம்பதியினர் வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் எவ்வாறு அமையும் என்பதை கணிக்கிறது வேதைப் பொருத்தம்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.